சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் விசேட ஊடகவியலாளர் மாநாடு கொழும்பில் இடம்பெற்றது.
இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதிநிதிகள் குழுவின் தலைவர் பீட்டர் ப்ரூவர், இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையே 2.9 பில்லியன் டொலர்கள் நீடிக்கப்பட்ட நிதி வசதிக்காக ஒரு உடன்பாடு எட்டப்பட்டது. இது 48 மாத வேலைத்திட்டமாகும். இதனை IMF முகாமைத்துவம் மற்றும் நிர்வாகக் குழுவால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
அதிகாரிகள் ஏற்கனவே பொருளாதார சீர்திருத்தங்களை தொடங்கியுள்ளனர். இது தொடர்ந்து நடக்க வேண்டும்.
இலங்கையின் வெளிநாட்டுக் கடன் நிலையானதாக இல்லை. அதை மறுசீரமைக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.