வாடகைத்தாய் “தடை விதிக்க வேண்டும்”

குழந்தையின்மையை போக்க ஏராளமான மருத்துவ தொழில்நுட்பங்கள் வளர்ந்து விட்டன. அவற்றில் ஒன்றுதான் வாடகைத்தாய் எனும் முறை. ஆங்கிலத்தில் surrogacy என்று கூறப்படுகிறது.

ஒரு பெண் மற்றொரு பெண்ணுக்காக தன்னுடைய கர்ப்பப்பையை பயன்படுத்தி குழந்தை பெற்றெடுக்கும் முறையே வாடகைத்தாய் எனப்படுகிறது. குழந்தை பிறந்த பிறகு அதை பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும். உடல்ரீதியாக குழந்தை பெற்றெடுக்க முடியாத பெற்றோருக்காக இந்த முறை கொண்டு வரப்பட்டது. சமீப காலமாக வாடகைத்தாய் மூலமாக குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் போக்கு உலக அளவில் அதிகரித்து விட்டது.

இந் நிலையில், “வாடகைத்தாய் முறைக்கு சர்வதேச அளவில் தடை கொண்டு வர வேண்டும்” என போப் பிரான்சிஸ் வலியுறுத்தியுள்ளார். ரோம் நகரில் வெளியுறவு கொள்கை தொடர்பாக போப் பிரான்சிஸின் உரையில் இந்த தகவல் இடம் பெற்றுள்ளது. வாடகைத்தாய் முறையை இழிவானது என்றும் விமர்சித்துள்ள போப் பிரான்சிஸ், வாடகைத்தாய் முறை அமைதி மற்றும் மனித கண்ணியத்திற்கு அச்சுறுத்தலானது என்றும் சாடியுள்ளார்.

Recommended For You

About the Author: admin