அங்குனகொலபெலஸ்ஸ பிரதேசத்தில் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய அரிசி ஆலையொன்றை நிர்மாணிப்பதற்கு சீன அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
அரிசி உற்பத்தியில் பெரும் ஏகபோகம் காணப்படுவதாகவும், இதில் ஒருசில அரிசி ஆலை உரிமையாளர்களால் அரிசியின் விலை நிர்ணயிக்கப்படுவதாகவும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
குறித்த அதிகாரத்தை இல்லாதொழிப்பதற்கு அரசாங்கம் பல்வேறு அதிநவீன அரிசி ஆலைகளை இயக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பணிகளை அரசாங்கத்தினால் தனித்து மேற்கொள்ள முடியாததால் காரணமாக அங்குனகொலபெலஸ்ஸ பிரதேச இளைஞர்களை பயன்படுத்தி கூட்டுறவு வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படும் எனவும் அமைச்சில் தெரிவித்துள்ளார்.
இதன்படி, தென் மாகாணம் முழுவதும் உற்பத்தி செய்யப்படும் நெல்லை அரிசியாக மாற்றி சீன அரிசி ஆலை ஊடாக நாடு முழுவதும் விநியோகிக்க முடியுமென விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.