அரசாங்கத்திற்கு எதிராக அரகல போராட்டம் வெடிக்கும் சாத்தியம்

வரி சுமையை மக்கள் மேல் சுமத்தி அவர்களை நசுக்கியுள்ளனர். எனவே, அரசாங்கம் இந்த வரி தொடர்பில் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

”பாராளுமன்றில் வரவு – செலவு திட்டத்தை நிறைவேற்றும் போது மௌனமாக இருந்தவர்கள் இன்று வெளியே வந்து, அதிகரித்த வரிக்கு எதிராக குரல் கொடுக்கிறார்கள்.

பாராளுமன்றில் இவர்கள் ஏன் அமைதியாக இருந்தார்கள்?. அத்தியாவசிய பொருட்கள் மீதான வரிகளை நீக்குவதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசாங்கம் இதனை நீக்கா விடின் இன்னுமொரு அரகல போராட்டம் நாடாளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும். மக்களை நேசிக்கும் அனைத்து தரப்பினரும் புதிய வரி விதிப்புக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும்.” என்றார்.

Recommended For You

About the Author: admin