புத்தாண்டு கொண்டாட்டங்களில் உலக நாடுகள் ஈடுபட்டுள்ள நிலையில், 90,000 பொலிஸாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தியுள்ளதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது.
அத்துடன், பாதுகாப்பு பணியில் ட்ரோன்களை பொலிஸார் பயன்படுத்துவதற்கும் முதன் முறையாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பாரிஸில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் 2024 ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை மையமாகக்கொண்டு இடம்பெற்று வருகிறது.
இதன்படி, வானவேடிக்கைகள், காணொளிகள் உள்ளிட்ட பல்வேறு களியாட்ட நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.
இதனிடையே, கடந்த டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி ஈபிள் கோபுரத்துக்கு அருகில் கத்தியால் தாக்கப்பட்டு சுற்றுலா பயணி ஒருவர் உயிரிழந்த நிலையில், பிரான்ஸில் ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்னதாக பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையிலே, பிரான்ஸில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.