இலங்கை கம்யூனிஸ்ட் கட்சிக்கு வலைவீசும் திலங்க

சுதந்திரக மக்கள் காங்கிரஸில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியை இணைத்துக்கொள்ளும் முயற்சிகளின் அக்கட்சியின் பொதுச் செயலாளர் திலங்க சுமத்திபால ஈடுபட்டு வருகிறார்.

எதிர்காலத்தில் நடைபெறும் தேர்தல்களில் சுதந்திர மக்கள் காங்கிரஸ் முன்னெடுக்க உள்ள வியூகங்கள் தொடர்பில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் டிவ் குணசேகரவுடன் திலங்க சுமத்திபால கலந்துரையாடலொன்றை நடத்தியுள்ளார்.

கொழும்பு 08, என்.எம். பெரேரா மாவத்தையில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகத்திலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது சுதந்திர மக்கள் காங்கிரஸுடன் இணைந்து பணியாற்ற கம்யூனிஸ்ட் கட்சிக்கு திலங்க சுமத்திபால அழைப்பு விடுத்துள்ளதுடன், தேர்தலில் பரந்தப்பட்ட கூட்டணியொன்றை அமைப்பது குறித்தும் கலந்துரையாடியுள்ளதாக அறிய முடிகிறது.

ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் பரந்தப்பட்ட கூட்டணியொன்றை அமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. ஆளுங்கட்சியான பொதுஜன பெரமுன ஐ.தே.க உட்பட பல கட்சிகளுடன் கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளது.

எதிர்க்கட்சியும் கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்தியுள்ளது. ஏற்கனவே, பல சிறுபான்மைக் கட்சிகள் ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணியில் உள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட மேலும் பல கட்சிகளை கூட்டணியில் இணைத்துக்கொள்ளவும் ஐ.ம.ச. பேச்சுவார்த்தைகளை ஈடுபட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin