ஜப்பானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் சுனாமி அலைகள் தாக்க தொடங்கியதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இன்று அதிகாலை 7.6 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு சுனாதி எச்சரிக்கை விடுக்க்பட்டிருந்தது.
இந்நிலையில் ஜப்பானின் கடற்கரை பகுதிகளில் சுனாமி அலைகள் தாக்கியுள்ளது.
இதனையடுத்து கரையோர மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஜப்பானில் இன்று அதிகாலை பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் -சுனாமி எச்சரிக்கை விடுப்பு
ஜப்பானில் வட மத்திய பகுதியில் இன்று காலை 7.4 ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் பதிவானது.
இதனையடுத்து இஷிகாவா, நிகாட்டா மற்றும் டோயாமா ஆகிய பிரதேசங்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக ஜப்பானின் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ஹோன்ஷி அருகே 13 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் 5 மீட்டர் உயரத்திற்கு கடல் அலைகள் எழும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த கடலோர பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
இந்த நிலநடுக்கத்தையடுத்து ஜப்பானில் கட்டிடங்கள் குலுங்கியதையடுத்து, மக்கள் பெரிதும் அச்சத்திற்குள் உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
இருப்பினும் இதுவரையில் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பில் தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.