யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கேவில் கடற்றொழிலாளர்கள் சங்கத்திற்கு உட்பட்ட இரண்டு மீனவர்களுக்கு சொந்தமான இரண்டு படகுகள், மற்றும் 14 இலட்சம் ரூபா பெறுமதியான வலைகள் என்பன தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று இரவு கேவில் பாலையடி மேற்கு களப்பு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற கேவில் கடற்றொழிளாளர் கூட்டத்தில் இறால்களின் இனப்பெருக்கத்திற்காகவும், அதனை இறாலின் பருமன் வளர்சியை அதிகரிப்பதற்க்காகவும் இறால் கூடு கட்டுவதை தற்காலிகமாக தடை செய்திருந்தது.
இதை மீறி தொழிலில் ஈடுபட்ட பலரின் உபகரணங்கள் கைப்பற்றப்பட்ட போதும் விசமி ஒருவர் இரண்டு மீனவர்களுக்கு சொந்தமான மீன்பிடி உபகரணங்களை தீயிட்டு எரித்துள்ளதாக கேவில் கடற்றொழிலாளர்கள் தெரிவித்தனர்.
இதில் க.மதிவாணன், க.சிவம், ஆகியோரது இலட்சக்கணக்கான மீன்பிடி உபகரணங்களே இவ்வாறு நாசமாக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளும் இடம்பெற்று வருகிறது.