நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணிநேரத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றவளைப்பு நடவடிக்கையில் 1,467 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வாறு, கைது செய்யப்பட்டவர்களில் 56 சந்தேக நபர்கள் தடுப்புக்காவல் உத்தரவின் அடிப்படையில் மேலதிக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், போதைப் பழக்கத்திற்கு அடிமையான 51 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் விசேட பணியகத்தின் பதிவு செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பட்டியலில் இருந்த 164 சந்தேக நபர்கள் இன்று கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த நடவடிக்கையின் போது 450 கிராம் ஹெரோயின், 653 கிராம் ஐஸ், 3 கிலோ 637 கிராம் கஞ்சா மற்றும் 103,793 கஞ்சா செடிகள் உள்ளிட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.