கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் மாரடைப்பை எதிர்கொள்ளும் அபாயம் உள்ளதாக தெரியவந்துள்ளது.
ஜப்பானிய ஆராய்ச்சியாளர்களினால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
இதன்படி, கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலின் தாக்கத்தால் ஏற்படும் நீண்டகால சிக்கலாக, எதிர்காலத்தில் மாரடைப்பு ஏற்படும் வீதம் அதிகரிப்பதற்கு வழிவகுக்குமென கண்டறியப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், வைரஸின் செயற்பாடு குறித்த விரிவான ஆய்வுகள் இன்றி இத்தகைய கருத்தை வெளிப்படுத்த முடியாது என சில அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, கொரோனா வைரஸின் திரிப்பான JN1 உலகளாவிய ரீதியில் பல்வேறு நாடுகளில் பரவியுள்ள போதிலும், இலங்கையில் பரவுவதற்கான அபாயம் குறைவு என சுகாதார தரப்பு அண்மையில் அறிவித்திருந்தது.
இந்த நிலையில், உயிராபத்து சிக்கல்கள் குறைவாக இருக்கின்ற போதும் சுகாதார அமைச்சு விழிப்புடன் செயற்பட வேண்டுமென அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.