செங்கடல் வழி கட்டணங்கள் அதிகரிப்பு

மத்திய கிழக்கின் செங்கடல் பிராந்தியத்தில் யேமனின் ஹவுதி போராளிகளின் தாக்குதல்கள் காரணமாக அந்த கடல் வழியாக பயணிக்கும் வணிக கப்பல்கள் தமது கட்டணங்களை 300 வீதமாக அதிகரித்துள்ளதாகவும் இது இலங்கையின் ஏற்றுமதியாளர்களை கடுமையாக பாதிக்கக்கூடும் எனவும் ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நிலவும் நிலைமையின் அடிப்படையில் இலங்கையில் இருந்து செங்கடல் வழியாக ஏற்றுமதி செய்யப்படும் 20 அடி கொள்கலன் பெட்டிகளுக்கு தற்போது அறவிடப்படும் 600 அமெரிக்க டொலர்கள் ஆயிரத்து 500 டொலர்களாக அதிகரிக்கலாம் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

யேமனில் இயங்கி வரும் ஹவுதி போராளிகள் இஸ்ரேலை இலக்கு வைத்து செங்கடலில் பயணிக்கும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதே இந்த நிலைமைக்கு காரணம்.

இந்த நிலையில், ஹவுதி போராளிகள் அண்மையில் வணிக கப்பல் ஒன்றை தமது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தனர்.

இதன் காரணமாக சில கப்பல் நிறுவனங்கள் செங்கடல் வழியாக பயணிப்பதற்கு பதிலாக மாற்று வழியில் பயணம் செய்வது குறித்து கவனம் செலுத்தியுள்ளன.

செங்கடலில் பெம் எல். மென்டேப் பகுதிக்கு அருகில் நடக்கும் இந்த தாக்குதல்கள் காரணமாக கப்பல்களில் பொருட்களை கொண்டு செல்லும் 20 அடி கொள்கலன் பெட்டிகளுக்கான கட்டம் இந்த மாதம் ஆயிரத்து 500 டொலர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

செங்கடலுக்கு பதிலாக மாற்று வழியில் கப்பல்கள் பயணித்தால் இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு மேலும் அதிகளவான கட்டணங்களை செலுத்த நேரிடும் எனவும் ஏற்றுமதியாளர்கள் கூறியுள்ளனர்.

Recommended For You

About the Author: admin