திடீரென தனது விண்வெளி திட்டத்தை ரத்து செய்த நாசா!

விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, மனிதர்களை நிலவுக்கு அனுப்புவதற்கான ஆர்டெமிஸ் திட்டத்தை தொடங்கியுள்ளது.

2025க்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ள நாசா, ஆர்டெமிஸ் 1 திட்டத்தை செயல்படுத்த உள்ளது.

இந்த திட்டத்தின் முதல்படியாக நிலவு குறித்த ஆராய்ச்சிக்காக, ஓரியன் விண்கலத்தை எஸ்எல்எஸ் ராக்கெட் மூலம் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது.

கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து இன்று (28-08-2022) மாலையில் ராக்கெட் ஏவப்படும் என அறிவிக்கப்பட்டு அதற்கான கவுண்ட் டவுன் தொடங்கப்பட்டது.

ஆனால் கடைசி நேரத்தில் ராக்கெட் என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ராக்கெட்டை செலுத்தும் திட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இனி செப்டம்பர் 2-ம் திகதி செலுத்த திட்டமிட்டுள்ளனர்.

ஆனால் அன்றைய தினம் ராக்கெட் செலுத்தப்படுமா? என்பதை நாசா உறுதிப்படுத்தவில்லை. பாதுகாப்பு எப்போதும் முக்கியம் என்று கூறி உள்ள நாசா, ராக்கெட்டின் மூன்றாவது என்ஜினில் ஏற்பட்ட கோளாறை சரிசெய்யும் பணி நடைபெறுவதாக தெரிவித்துள்ளது.

ஆர்ட்டெமிஸ் 1 திட்டத்தில் விண்வெளி வீரர்கள் அனுப்பப்படமாட்டார்கள். சோதனை முயற்சியாக மனிதர்களை போன்ற பொம்மைகளை ஓரியன் விண்கலத்தில் அனுப்ப உள்ளனர்.

மனித பொம்மைகளை நிலவுக்கு கொண்டு செல்லும் ஓரியன் விண்கலம், கலிபோர்னியாவின் சான் டியாகோ கடற்கரையில் பசிபிக் பெருங்கடலில் தரையிறங்கும் வகையில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor