சாப்பிட்டவுடன் நடை பயிற்சி மேற்கொள்வதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்

உணவு உட்கொண்டவுடன் சிறிது நேரம் நடப்பதால், உடலின் செரிமான அமைப்பு நன்றாக வேலை செய்யத் தொடங்குகிறது. உணவு சாப்பிட்ட பிறகு 15 முதல் 20 நிமிடங்கள் நடக்க முடிந்தால், அது இன்னும் பல நன்மைகளை அளிக்கும்.

சாப்பிட்டவுடன் உடலுக்கு சிறிய இயக்கத்தை கொடுப்பது நல்லது. எனினும், அதிகமாகவோ அல்லது மிகவும் வேகமாகவோ நடப்பதை தவிர்க்க வேண்டும்.

இந்த ஒரு ஆரோக்கியமான பழக்கத்தால், உங்கள் எடை மற்றும் சர்க்கரை இரண்டும் கட்டுப்பாட்டில் இருக்கும். ஒருவர் சாப்பிட்ட பிறகு எவ்வளவு நேரம் நடக்க வேண்டும் என்பதையும் அதன் நன்மைகளையும் இங்கே காணலாம்.

உணவு சாப்பிட்டயுடன் நடப்பதால் கிடைக்கும் நன்மைகள்:

உணவை உட்கொண்டவுடன் நடப்பது செரிமான செயல்முறையை துரிதப்படுத்துகிறது.
உணவு விரைவாக ஜீரணமாக உதவுகிறது.
உணவுக்குப் பிறகு தினமும் 20 முதல் 30 நிமிடங்கள் நடப்பதால் உடல் எடை குறைகிறது.
உணவு சாப்பிட்ட பிறகு நடப்பதால், வாயுத்தொல்லை, மலச்சிக்கல் மற்றும் வயிறு தொடர்பான பிரச்சினைகள் ஏற்படாது.
வளர்சிதை மாற்றமும் பலப்படுத்தப்படுகிறது.
உணவைச் சாப்பிட்ட பிறகு நடைப்பயிற்சி செய்வது மன அழுத்தத்தைக் குறைக்கிறது.
இது நல்ல இரவு உறக்கத்துக்கு வழிவகுக்கிறது.
உணவு உட்கொண்ட பிறகு தினமும் நடப்பதால், தசைகள் சரியாக வேலை செய்யும்.
இதன் காரணமாக உடலில் இரத்த ஓட்டம் நன்றாக இருக்கும்.
சாப்பிட்ட பிறகு நடப்பது இரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது.
டைப் 2 நீரிழிவு நோயாளிகள் உணவுக்குப் பிறகு சிறிது நேரம் கண்டிப்பாக நடக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
உணவு உட்கொண்ட பிறகு எவ்வளவு நேரம் நடக்க வேண்டும்?

ஒவ்வொரு நாளும் நீங்கள் உணவை உட்கொண்ட பிறகு குறைந்தது 15-20 நிமிடங்களாவது நடக்க வேண்டும். உங்களுக்கு அதிக நேரம் இருந்தால், இந்த நேரத்தை அதிகரிக்கலாம். ஆனால் நீங்கள் சாப்பிட்ட ஒரு மணி நேரத்திற்குள் நடந்தால்தான் பயன் இருக்கும்.

உணவு உட்கொண்ட பிறகு நடக்கும்போது இந்த விஷயங்களை மனதில் கொள்வது நல்லது:

நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், நடை பயிற்சியுடன் உங்கள் உணவையும் நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும்.
உணவு உட்கொண்ட பிறகு நீங்கள் நடக்க வேண்டும், ஆனால் மெதுவாக நடக்க வேண்டும். வேகமாக நடப்பதால் பலன் இருக்காது.
சாப்பிட்ட பிறகு விறுவிறுப்பாக, வேகமாக நடப்பது செரிமான அமைப்பைக் கெடுக்கும்.
சாப்பிட்ட பிறகு எந்தவிதமான கடின உடற்பயிற்சியையும் செய்ய வேண்டாம்.
வாரத்திற்கு குறைந்தது ஐந்து முறையாவது 30 நிமிடங்கள் கண்டிப்பாக நடக்க வேண்டும். இப்படி செய்தாலே போதும், நீங்கள் உங்கள் உடலை ஃபிட்டாக வைத்திருக்க முடியும்.

Recommended For You

About the Author: webeditor