இந்திய பெருங்கடலில் நிர்கதிக்குள்ளான ரொஹிங்கிய அகதிகள்

இந்திய பெருங்கடலில் படகொன்றில் நிர்கதிக்குள்ளாகி உள்ள 185 பேரை அவசரமாக மீட்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை அழைப்பு விடுத்துள்ளது.

இந்திய பெருங்கடலின் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு அருகில் இவ்வாறு நிர்கதிக்குள்ளாகி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த படகில் உள்ளவர்களில் 70 சிறுவர்கள் மற்றும் 88 பெண்கள் அடங்குவதாக UNHCR தெரிவித்துள்ளது.

இதில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், பெருமளவானவர்கள் ஆபத்தான நிலையில் இருப்பதாக அஞ்சப்படுகிறது.

குறித்த படகில் இருப்பவர்கள் ரொஹிங்கிய அகதிகள் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், அவர்களை அவசரமாக மீட்குமாறு அப்பகுதியில் உள்ள அனைத்து கடலோர அதிகாரிகளுக்கும் UNHCR வேண்டுகோள் விடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மியன்மாரில் கடுமையாக துன்புறுத்தலுக்கு உள்ளான ஆயிரக்கணக்கான ரொஹிங்கிய அகதிகள் ஒவ்வொரு ஆண்டும் ஆபத்தான கடல் பயணங்களை மேற்கொண்டு மலேசியா அல்லது இந்தோனேசியா ஆகிய நாடுகளில் தஞ்சமடைய முயற்சிக்கின்றனர்.

இதன்படி, கடந்த 2022 ஆம் ஆடனில் 2000 இற்கும் மேற்பட்ட ரொஹிங்கிய அகதிகள் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு ஆபத்தான பயணத்தை மேற்கொண்டதாக நம்பப்படுகிறது.

2023 ஆம் ஆண்டு முதல் இதுவரை ரொஹிங்கிய அகதிகள் உட்பட 570 இற்கும் மேற்பட்டோர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், உயிர்களைக் காப்பாற்றுவதற்காக சரியான நேரத்தில் முயற்சிகளை முன்னெடுப்பதன் மூலம் பாரிய துயரத்தைத் தடுக்க முடியும் என UNHCR தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: admin