மன்னிப்புக் கோரியது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்

விமானம் ரத்து மற்றும் பயண தாமதம் உள்ளிட்ட காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ள பயணிகளிடம் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மன்னிப்பு கோரியுள்ளது.

இந்த பரபரப்பான நேரத்தில் இயந்திர கோளாறு, விமான தாமதம் மற்றும் அண்மையில் பாரிஸில் வைத்து டயர் வெடித்த சம்பவங்களால் பயணிகள் அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.

அதே நேரத்தில், இரண்டு உதிரி இயந்திரங்கள் மற்றும் புதிதாக குத்தகைக்கு எடுக்கப்பட்ட A320 விமானத்தைப் பெறுவதில் தாமதம் ஏற்பட்டதால் விமான போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது.

பண்டிகைக் காலத்தில் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஏற்றுக்கொள்வதுடன், பயணத் திட்டங்களுக்கு ஏதேனும் இடையூறு ஏற்பட்டால் அதற்காக வருத்தம் தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட பயணிகளுக்கான பயண ஏற்பாடுகளை விரைவுபடுத்த அயராது உழைத்து வருவதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் நாட்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

சமீபத்தில் குத்தகைக்கு எடுக்கப்பட்ட A320 விமானம் ஏற்கனவே சேவையில் இணைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மேலும் இரண்டு A320 விமானங்கள் அடுத்த வாரத்தில் மாற்றப்பட்ட இயந்திரங்களுடன் சேவைக்குத் திரும்பவுள்ளதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: admin