முல்லைத்தீவு – உடையார்கட்டு புனித யூதா ததேயு ஆலயத்தின் ஏற்பாட்டில் கிறிஸ்து பிறப்பை கொண்டாடவும் ஆலய கட்டுமான பணிக்கு நிதி சேர்க்கும் வகையில் வன்னி மண்ணில் முதல் தடவையாக 50 அடி உயரம் கொண்ட பிரமாண்ட கிறிஸ்மஸ் மரம் உருவாக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 23ம் திகதி சனிக்கிழமை மாலை 7 மணிக்கு கரோல் நிகழ்வோடு, யாழ் மறை மாவட்ட குரு முதல்வர் பி.ஜோ.ஜெபரட்ணம் அடிகளாரால் திறந்து வைக்கப்படவுள்ளது.
உணவகம், விற்பனை நிலையங்கள் மற்றும் மேல் தளத்தில் அமைத்துள்ள பாலன் குடில் ஆகிய சிறப்பம்ங்களுடன் கூடிய நிகழ்வாக இடம்பெறவுள்ளது.
23 ஆம் திகதி முதல் மாலை 5 மணி முதல் இரவு 10 மணிவரை மக்கள் பார்வைக்காக திறந்திருக்கும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.