பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் ஆகிய வலைத்தளங்களின் அம்சங்களை ஒன்றிணைப்பதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளதாக மெட்டா நிறுவனத்தின் CEO மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.
ஸ்டேட்டஸ் அப்டேட்டுகளை பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்வது போல அதன் பிற தளங்களிலும் இந்த அம்சத்தை கொண்டு வருவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த அம்சம் தற்போது வாட்ஸ்அப் பயனர்களுக்கும் கிடைக்கவுள்ளது.
சமீபத்திய அறிக்கையின்படி, வாட்ஸ்அப் யூசர்கள் தங்களது ஸ்டேட்டஸ் அப்டேட்டுகளை இன்ஸ்டாகிராமில் ஸ்டோரிஸ் ஆக ஷேர் செய்வதற்கான அம்சத்தை பெறுகிறார்கள். இந்த அம்சம் தற்போது ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கான பீட்டாவில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த அம்சம் ஒரு ஆப்ஷனல் தேர்வாக இருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.
இன்ஸ்டாகிராமில் ஸ்டேட்டஸ் அப்டேட்டுகளை ஷேர் செய்ய வேண்டுமா வேண்டாமா என்பதை வாட்ஸ் அப் யூசர்கள் முடிவு செய்து கொள்ளலாம்.
ஒரே கண்டன்ட்டை பல்வேறு விதமான பிளாட்ஃபார்ம்களில் பகிரும் போது எடுத்துக் கொள்ளக்கூடிய நேரம் இந்த அம்சம் மூலமாக குறைக்கப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது.
எனினும் இந்த இரண்டு தளங்களின் போட்டோ மற்றும் வீடியோ எடிட்டிங் திறன்கள் வெவ்வேறாக அமைகின்ற காரணத்தினால், வாட்ஸ்அப்பில் இருந்து நேரடியாக சேர்க்கும் பொழுது தங்களது ஸ்டோரீஸ்களின் தரத்தில் இன்ஸ்டாகிராம் யூஸர்கள் வித்தியாசத்தை காண்பார்கள்.
அதே நேரத்தில் யூசர் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக வாட்ஸ்அப் கூடுதலாக சில அம்சங்களை அறிமுகப்படுத்த உள்ளது. அந்த வகையில் வாட்ஸ்அப் நிறுவனம் சமீபத்தில் ஒரு புதிய AI சாட்ஸ் அம்சத்தை அறிமுகப்படுத்தியது. இதன் மூலமாக யூசர்கள் AI சாட்பாட் உடன் தொடர்பு கொள்ளலாம்.
சாட் டாபில் புதிய சாட்களை துவங்குவதற்கான ஐகானிற்கு மேல் ஒரு புதிய பட்டன் சேர்க்கப்பட்டுள்ளது.
Meta AI மூலமாக இயக்கப்படும் AI chatbot முதன் முதலில் வாட்ஸ்அப்பின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்தின் CEO மார்க் ஜூக்கர்பெர்க்கால் செப்டம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த அறிவிப்பின்போது, AI மூலமாக இயக்கப்படும் சாட்பாட்களில் சோதனை நடைபெற்று வருவதாகவும், இது அமெரிக்காவில் உள்ள குறிப்பிட்ட ஒரு பகுதியை இலக்காக கொண்டு நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
செப்டம்பர் மாதத்தின் பிற்பகுதியில் மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப்பின் பீட்டா வெர்ஷனில் AI சாட்டை அறிமுகப்படுத்தியது. எனினும் அது தொடர்பு பட்டியலில் மறைந்திருந்த காரணத்தால் பல யூசர்களால் அதனை கண்டுபிடித்து அதனுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை.
எனவே யூசர் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக சாட்பாட்டை ஈசியாக அணுகுவதற்கு ஹோம் ஸ்கிரீனில் ஒரு பட்டன் அமைக்கப்பட்டது. இது 2.23.24.26 என்ற ஆண்ட்ராய்டு வெர்ஷனுக்கான வாட்ஸ்அப் பீட்டாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
அதுமட்டுமல்லாமல் பயனரின் பிரைவசியை மேம்படுத்துவதற்கு வாட்ஸ்அப் சர்ச் பார் அம்சத்தை அறிமுகப்படுத்தியது. இந்த அம்சம் மூலமாக யூசர்கள் பிறரை யூசர்நேம் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.
பிரைவசி மற்றும் தனிநபர் விவரங்களுக்கு முன்னுரிமை தரக்கூடிய நபர்களுக்கு இந்த அம்சம் பயனுள்ளதாக இருக்கும். தங்களது உண்மையான பெயரை வெளியிடுவதற்கு பதிலாக யூசர் நேம் மூலமாக பிறருடன் தொடர்பு கொள்ளலாம்.