தொலைபேசியில் ஸ்பீக்கர் சரியாக வேலை செய்யவில்லையா? இவற்றை செய்து பாருங்கள்

தொலைபேசியில் ஸ்பீக்கர் நாளாக நாளாக அதன் ஒலியை கொஞ்சம் கொஞ்சமாக இழக்க தொடங்கிவிடும். இதன் காரணமாக நம்மால் ஒருவரை தொடர்புக்கொண்டு பேசுவது கூட கடினமாகிவிடும். அந்த அளவுக்கு ஸ்பீக்கரின் செயல்பாட்டு தன்மை குறைந்துவிடும். அதை எப்படி சரிசெய்வது என்று இந்த பதிவில் பார்ப்போம்.

உங்கள் தொலைபேசியில் இருந்து எந்த ஒலியும் வரவில்லை என்றால், முதலில் அது ஏதேனும் புளூடூத் உடன் கனெக்ட் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்துக்கொள்ளுங்கள். அவ்வாறு உங்கள் போன் புளூடூத் உடன் கனெக்ட் செய்யப்பட்டிருந்தால் உங்களால் எந்த வித ஒலியையும் கேட்க முடியாது.

அப்படி இல்லாமல் ஸ்பீக்கரின் இருந்து லேசான சத்தம் கேட்டால், ஸ்பீக்கரில் தூசி படிந்திருக்கலாம். எனவே ஸ்பீக்கரில் படிந்திருக்கும் தூசியை முழுவதுமாக துடைத்து சுத்தம் செய்ய வேண்டும்.

அப்படியும் உங்கள் ஸ்பீக்கர் வேலை செய்யவில்லை என்றால் தொலைபேசியை அன்லாக் செய்து வால்யூம் பட்டனை அழுத்தவும். அப்போதும் உங்கள் மொபைல் போனில் வால்யூம் முழுமையாக இருந்து ஒலி அதிகரிக்கவில்லை என்றால் செட்டிங்ஸ்-க்கு சென்று சில மாற்றங்களை செய்ய வேண்டும்.

செட்டிங்ஸ்-க்கு சென்று Volume என்ற ஸ்லைட் பாரை கிளிக் செய்ய வேண்டும். அவ்வாறு கிளிக் செய்தால் ரிங்டோன், அலாரம், மீடியா என பல ஆப்ஷன்கள் தோன்றும். அவற்றை செட் செய்த பிறகு மொபைல் போனின் ஒலி தன்மை சீராக உள்ளதா என சோதித்து பாருங்கள்.

அப்போது ஒலி சிக்கல் சீராகவில்லை என்றால் வால்யூம் செயலியை தனியாக பதிவிரக்கம் செய்து பயன்படுத்தலாம். பிளே ஸ்டோரில் உள்ள Volume Booster என்ற ஆப்-ஐ டவுண்லோடு செய்வதன் மூலம் உங்கள் போன் ஸ்பீக்கர் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்.

Recommended For You

About the Author: admin