வாட்ஸ்அப் செட்களை QR குறியீடு மூலம் மாற்றுவது எப்படி?

வட்ஸ்அப்பை பொருத்தவரை பலவிதமான அப்டேட்கள் நாளாந்தம் மெருகேரி கொண்டெ தான் போகின்றது.

ஆனாலும், அந்த அப்டேட்களை நாம் எப்படி பயன்படுத்துவது என்ற குளப்பத்திலேயே அதை பயன்படுத்தாது விட்டு விடுவோம்.

அல்லது நமக்கு ஏன் வேண்டாத வேலை என எண்ணி அதை செய்வது கிடையாது.

அந்தவகையில், அண்மையில வெளியான அப்டேட்டான QR முறை மூலம் செட்களை வேறு தொலைபேசிக்கு மாற்றும் முறை பற்றி பார்ப்போம்.

இரண்டு ஃபோன்களும் ஒரே வைஃபை நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும்.

அதன்பிறகு கீழே இருக்கும் வழிமுறைகளை பின்பற்றுங்கள்

Navigate to More Options > Settings > Chats > Transfer chats > Start என்பதை செய்யுங்கள்

உங்கள் புதிய மொபைலில் வாட்ஸ்அப்பை நிறுவி, அதே தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி பதிவு செய்யவும்.

பழைய தொலைபேசியிலிருந்து வாட்ஸ்அப் சாட் history-ஐ மாற்ற “Start” என்பதைத் கிளிக் செய்யவும்.

தேவையான அனுமதிகளை வழங்கவும். பின்னர், QR குறியீடு காட்டப்படும்.

QR குறியீட்டை ஸ்கேன் செய்ய உங்கள் பழைய சாதனத்தைப் பயன்படுத்தவும்.

தொலைபேசிகளை இணைப்பதற்கான அனுமதி கிடைத்ததும், டிரான்ஸ்பர் செயல்முறை தொடங்கும்.

Chat History டிரான்ஸ்பர் ஆனதும், “Done” என்பதைத் கிளிக் செய்யவும்

Recommended For You

About the Author: admin