பூமியைச் சுற்றி வரும், சந்திரனில் மனிதர்களால் வாழமுடியுமா? அதற்கான சாத்தியங்களைக் உள்ளதா? சந்திரனில் நீர் ஆதாரம் உள்ளதா என்பதை ஆராய அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், இந்தியா என்று பல நாடுகள் முயன்று வருகின்றன.
அதற்காக நிலவில் இருந்து மண் மாதிரிகள் கூட பூமிக்கு எடுத்து வரப்பட்டுள்ளன.
நாசாவின் நிதியுதவி பெற்ற அப்பல்லோ மிஷனால் எடுத்துவரப்பட்டு நிலவு மண் மாதிரிகளைப் பயன்படுத்தி அமெரிக்க கடற்படை ஆராய்ச்சி ஆய்வகம் சில ஆராய்ச்சிகளை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், அமெரிக்க கடற்படை ஆராய்ச்சி ஆய்வகத்தின் (NRL) ஆராய்ச்சியாளர்கள் சந்திர மண் மாதிரிகளில் சூரிய கதிர்களால் உண்டான ஹைட்ரஜனைக் கண்டறிந்துள்ளனர்.
ஹைட்ரஜன் நீர் ஆதாரத்திற்கான மூலக்கூறு என்பதால் அதன் இருப்பு நீர் ஆதாரங்கல் இருந்தது அல்லது இருக்கிறது என்பதை சுட்டும் என்கின்றனர்.
இது எதிர்கால சந்திர ஆய்வு மற்றும் சந்திரனில் தளங்களை நிறுவுவதில் பேருதவியாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
சந்திர மண் தானியங்களுக்குள் சூரிய காற்று ஹீலியம் இருப்பதை அவர்களின் முந்தைய ஆய்வில் ஏற்கனவே உறுதிப்படுத்தியது. அனால் தற்போது தான் முதல் முறையாக, விஞ்ஞானிகள் சந்திர மாதிரிகளில் வெசிகல்களுக்குள் ஹைட்ரஜன்-தாங்கி இனங்களைக் கண்டறிவதை நிரூபித்துள்ளனர்.
மேலும் இந்தக் கண்டுபிடிப்பு, நிலவின் மேற்பரப்பில் நீர் இருப்பதைப் தெரிவிக்கிறது. இது அடுத்தடுத்து உலக நாடுகள் திட்டமிட்டு வரும் நீண்ட கால மனித இருப்பை ஆதரிப்பதற்கு இன்றியமையாதது. மேலும் விண்வெளி ஆய்வு பணிகள் செய்வதற்கும் இது முக்கிய பங்காற்றும்.
என்ஆர்எல்’ன் மெட்டீரியல்ஸ் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி பிரிவின் புவியியலாளர் டாக்டர் கேத்தரின் டி. பர்கெஸ் இந்த கண்டுபிடிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். அதில் அவர் குறிப்பிட்டதாவது, “ஹைட்ரஜன் தனிமத்தின் வழக்கமான அல்லது நிரந்தர நிறுவல்கள் இருக்கும் போது சந்திர மேற்பரப்பில் நேரடியாகப் பயன்படுத்தக்கூடிய ஒரு வளமாக இது மாறும் சாத்தியம் உள்ளது,” என்றார்.
அதோடு மண் மாதிரிகளில் தண்ணீரைக் கண்டறிந்துள்ளனர் என்பதை டாக்டர் பர்கெஸ் எடுத்துரைத்தார் மற்றும் NRL’s குழு முன்பு ஹீலியத்தை ஸ்கேனிங் டிரான்ஸ்மிஷன் எலக்ட்ரான் மைக்ரோஸ்கோபி,எலக்ட்ரான் ஆற்றல் இழப்பு ஸ்பெக்ட்ரோஸ்கோபி போன்ற மேம்பட்ட நுட்பங்களைப் பயன்படுத்தி கண்டறிந்தது.