வாட்ஸ் அப்பில் தனிநபர் மற்றும் குரூப்பில் முக்கிய மெசேஜ்களை Pin செய்யும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வாட்ஸ் அப் பயனர்களை எளிதாக அணுகுவதற்கு முக்கியமான chatகளை Pinned செய்யலாம்.
அது பேனர் போல நமக்கு காட்டும். மேலும், 24 மணிநேரம், 7 நாட்கள் அல்லது 30 நாட்கள் போன்ற விருப்பங்கள் மூலம் எவ்வளவு காலம் Pinned செய்யப்பட்டிருக்கும் என்பதை நாம் தேர்வு செய்ய முடியும்.
எந்த வகையான செய்தியையும் ஒரு உரையாடலில் Pin செய்யலாம், இதில் உரை, கருத்துக்கணிப்புகள், எமோஜிகள் மற்றும் பிறவை அடங்கும்.
iPhone: நீங்கள் Pin செய்ய விரும்பும் chat மீது வலதுபுறமாக ஸ்வைப் செய்து, பின்னர் ‘Pin’ என்பதைத் தட்டவும்.
Android: நீங்கள் Pin செய்ய விரும்பும் அரட்டையை அழுத்திப் பிடித்து, பின்னர் ‘Pin’ என்பதைத் தட்டவும்.
குரூப் நிர்வாகிகள் மட்டுமே செய்திகளைப் பின் செய்ய முடியுமா அல்லது அனைத்து உறுப்பினர்களும் செய்திகளைப் பின் செய்ய முடியுமா என்பதையும் இதில் தேர்வு செய்ய முடியும்.