கர்ப்பிணியின் உயிரைக் காப்பாற்றிய ஸ்மார்ட் வோட்ச்

இப்போது மக்கள் தங்களின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டும், அதை பாதுகாக்கவும் ஸ்மார்ட் வாட்சுகளைப் பயன்படுத்துகின்றனர்.

எவ்வளவு தூரம் நடக்கிறோம், எப்படி தூங்குகிறோம், இதயத் துடிப்பு, இரத்த அழுத்தம் போன்ற பலவற்றை ஸ்மார்ட் வாட்ச்கள் கணிக்கிறது. அந்த வகையில் ஆப்பிள் ஸ்மார்ட் வாட்சுகள் மிகவும் சிறந்ததாக இருக்கின்றன.

இப்படி தான் ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் தனக்கு உதவி செய்து, தன் உயிரை காப்பாற்றியதாக அமெரிக்க பெண் ஒருவர் நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.

ஒரு செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளிக்கும்போது, இந்த சம்பவத்தை அவர் விவரித்துள்ளார். இது முதல் கதை என்று நினைத்து விட வேண்டாம். ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் இதுவரை பல நபர்களின் உயிரைக் காப்பாற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.

சரி தற்போது சமீபத்திய புதிய கதையை பார்ப்போம். அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் வசித்து வருகிறார் வெரோனிகா வில்லியமஸ்.

இவர் தன் முதல் குழந்தையை சுமந்து நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த நேரத்தில் இவர் அணிந்திருந்த ஆப்பிள் ஸ்மார்ட் வாட்சில் இருந்து இவருக்கு நோட்டிஃபிகேஷன் அனுப்பப்பட்டது.

அதில், இவரின் இதயத் துடிப்பு சாதாரண அளவை தாண்டி இருப்பதாக கூறப்பட்டிருந்தது. அப்போது வெரோனிக்காவிற்கு மூச்சு விடுவதிலும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

உடனடியாக மருத்துவமனையை அணுகி மருத்துவ உதவியை நாடியுள்ளார்.

இதனை கண்டுபிடித்த மருத்துவர் லூயிஸ் பென்சன் அவருக்கு தொடர் சிகிச்சையளிக்க முடிவு செய்தார். இதற்கு தொடர்ந்து சிகிச்சை எடுத்துக்கொண்ட அவர், ஒரு மாதம் கழித்து சுகமுடன் வீடு திரும்பினார்.

தற்போது தன் குழந்தையுடன் மகிழ்ச்சியான வாழ்வைத் தொடங்கியிருக்கும் வெரோனிக்கா, ஆப்பிள் ஸ்மார்ட் வாட்சுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இதேபோல 40 வயதுடைய நபருக்கு தனது ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6 வாயிலாக Vo2 குறைந்த அளவில் இருப்பதாக நோட்டிபிகேஷன் வழங்கப்பட்டுள்ளது. இஸ்ரேலில் உள்ள ஷேக்லர் ஸ்கூல் ஆஃப் மெடிசின் மற்றும் லெவியேவ் ஹார்ட் சென்டரின் மருத்துவ ஆய்வாளர்கள் அவருக்கு சோதனைகளை செய்து, ஒரு பெரிய இருதயப் பிரச்னை இருப்பதை கண்டுபிடித்தனர்.

உடனடியாக சிகிச்சை தொடங்கப்பட்டு அந்த நபரும் காப்பாற்றப்பட்டுள்ளார். இப்படியாக பல சூழல்களில் ஆப்பிள் ஸ்மார்ட் வாட்சுகள் மனிதர்களின் உயிரை காப்பாற்றிய சம்பவங்கள், மக்களால் நெகிழ்ச்சியுடன் பார்க்கப்படுகிறது.

Recommended For You

About the Author: admin