‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் நடிகர் அர்ஜூன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் ஆரவ் தனது சமூக வலைதளத்தில் அஜித் மற்றும் அர்ஜுனுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
இந்த புகைப்படம் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் அர்ஜுன் ‘விடாமுயற்சி’ படத்தில் இணைந்துள்ளதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும், இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கும் ‘விடாமுயற்சி’ திரைப்படம் ஹொலிவுட் தரத்தில் உருவாக்கப்படவுள்ளதால் படப்பிடிப்பு முழுவதும் அஜர்பைஜான் நாட்டிலே நடைபெறவுள்ளது.
இந்நிலையில், நடிகர் அர்ஜூன் அஜித் கூட்டணியில் இணைந்திருப்பது ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை தூண்டியுள்ளது.
இதற்கு முன்பு அஜித்- அர்ஜுன் கூட்டணியில் ‘மங்காத்தா’ திரைப்படம் வெளியானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

