பொதுவாக ஆரஞ்சி பழம் குளிர்காலத்தில் சாப்பிட்டால் சளி பிடிக்கலாம் அல்லது வேறு ஏதேனும் உடல்நல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது.
மனிதர்களின் கண்கவர் நிறங்களில் இருக்கும் ஆரஞ்சு பழங்களை யாருக்குத்தான் பிடிக்காது? அதன் நிறத்தை போலவே சுவையிலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கட்டிப்போட்டு வைத்திருக்கின்றது.
ஆரஞ்சி பழத்தில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் மற்றும் பலன்களை தெரிந்தவர்கள் அதை எப்போதுமே தவற விடமாட்டார்கள்.
இவ்வளவு சிறப்புக்கள் இருந்தாலும் குளிர் காலத்தில் ஆரஞ்சி பழங்களை சாப்பிட்டால் சளி பிடிக்கலாம் அல்லது வேறு ஏதேனும் உடல்நல பாதிப்புகள் ஏற்படலாம் என மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.
அப்படியாயின் குளிர்காலத்தில் ஆரஞ்சி பழங்களை சாப்பிடுவதால் என்ன நடக்கும் என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.
ஆரஞ்சி பழம்
1. ஆரஞ்சு பழங்களை சாப்பிடுவதால் விட்டமின் சி சத்து கிடைக்கிறது. இதனால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாவதற்கான வைட்டமின் சினை கொடுக்கின்றது.
2. சளி, இருமல் பிரச்சினை இருப்பவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியால் நோயை குணப்படுத்தலாம். ஆரஞ்சி சாப்பிடுவதால் இப்படியொரு நன்மையும் இருக்கின்றது.
3. குளிர் காலத்தில் இயற்கையாகவே நம் சருமம் வறட்சியான தோற்றத்தில் காணப்படும். ஆரஞ்சி பழத்தை சாப்பிடுவதால் சருமத்தில் இருக்கும் வறட்சி தன்மை நீங்கும்.
4. சருமத்தின் செல்கள் அழிவதை ஆரஞ்சு பழம் தடுக்கும். அத்துடன் சருமத்திற்கு தேவையான நீர்ச்சத்தையும் கொடுக்கின்றது.
5. தினமும் ஆரஞ்சி பழம் சாப்பிடும் ஒருவருக்கு ஆண்டி- ஆக்ஸிடெண்ட் சத்துக்கள், நார்ச்சத்து மற்றும் பல்வேறு விட்டமின்கள் மற்றும் மினரல்களை கிடைக்கும் எனவும் கூறப்படுகின்றது.
முக்கிய குறிப்பு
ஆரஞ்சி பழத்தை அளவிற்கு அதிகமாக சாப்பிடும் பொழுது நோய்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கின்றது.