இளைஞனுக்கு எமனான தண்ணீர்!

இந்தியாவில் உள்ள மாநிலம் ஒன்றில் தேனீ கிடந்துள்ள தண்ணீரை குடித்த இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் உள்ள பெரேசியா பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த 22 வயதான ஹிரேந்திரா சிங் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இவர் கடந்த 6 -ம் திகதி இரவு வீட்டில் இருந்த போது தாகம் எடுத்துள்ளது. இதனால், ஒரு டம்ளரில் தண்ணீரை எடுத்து குடித்துள்ளார்.

தண்ணீரை குடித்த சிறிது நேரத்திலேயே ஹிரேந்திரா சிங்கிற்கு சுவாச கோளாறு ஏற்பட்டுள்ளது.

ஏனென்றால் இவர் குடித்த தண்ணீரில் தேனீ ஒன்று கிடந்துள்ளது. அந்த தேனீயானது அவரது உணவு குழாய்க்குள் சென்று கடித்துள்ளது.

ஹிரேந்திரா சிங்கிற்கு எரிய ஆரம்பித்ததால் அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு, அவருக்கு சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

சிகிச்சை பலனில்லாமல் கடந்த 7 -ம் திகதி அதிகாலையில் அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் காவல் ஆய்வாளார் நரேந்திரா குலஸ்தே பேசுகையில், ஹிரேந்திரா சிங் சிகிச்சையின் போது வாந்தி எடுத்ததில் தேனீ வெளியில் வந்துவிட்டது என்று கூறினார்.

Recommended For You

About the Author: webeditor