உடல் எடையை குறைப்பதற்கு உகந்த பானங்கள்

பானங்கள் என்றால் ஆரோக்கியமான பானங்களை மட்டுமே அருந்த வேண்டும். உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் போதுமான அளவு தண்ணீர் அருந்த வேண்டும். நீரேற்றமாக இருப்பது எடை இழப்புக்கு மிகவும் முக்கியமானது.

கிரீன் டீ

கிரீன் டீயானது உடல் எடையை குறைக்கவும், சரியான அளவிலான உடல் எடையை பராமரிக்கவும் பெரிதும் பயன்படுகிறது. கிரீன் டீ-யில் பூஜ்ஜிய கலோரி உள்ளது.

மேலும் இது வளர்சிதை மாற்றத்தை விரைவுபடுத்தவும் உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கிரீன் டீ-யில் உள்ள காஃபின் உள்ளடக்கம் கொழுப்பை எரிக்க உதவுகிறது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் இரண்டு கிளாஸ் கிரீன் டீ அருந்துவது நல்லது.

ஸ்மூத்தி

உடலைப் புத்துணர்ச்சியாக்கும் பானங்களில் ஒன்று தான் ஸ்மூத்தி. இந்த ஸ்மூத்தில் பல வகைகள் உள்ளன.

அவற்றில் விருப்பமான பழங்களை தனித்தனியாகவோ அல்லது அவை அனைத்தையும் சேர்த்தோ ஸ்மூத்தி செய்யலாம்.

ஸ்மூத்தி எடை இழப்புக்கு ஒரு சிறந்த வழி, ஆனால் அவை உணவு அல்லது சிற்றுண்டி மாற்றாகப் பயன்படுத்தப்படுவதற்கு போதுமான அளவு சத்துக்கள் நிறைந்துள்ளது

ஸ்மூத்தியில் ஏராளமான புரதங்கள், ஃபைபர், நிறைவுறா கொழுப்பு, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளது.

மூலிகை தேநீர்

மூலிகை தேநீர் எண்ணற்ற மூலிகையின் கலவையாக இருப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது.

இது உங்கள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைந்து உடல் எடையை குறைக்க உதவுகிறது. மூலிகை தேநீரில் காஃபின் அல்லாததாக இருப்பதால் ஆரோக்கியத்திற்கு சிறந்தது.

கிரீன் ஜூஸ்

கிரீன் ஜூஸ் பல்வேறு பச்சை காய்கறிகள், பழங்களில் இருந்து தயார் செய்யப்படும் ஆரோக்கிய பானமாகும். இதில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளது.

ஆனால் உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்களுக்கு கிரீன் ஜூஸ் ஒரு புத்துணர்ச்சியூட்டும் மற்றும் நீரேற்றமான பானமாக இருக்கும்.

நட்ஸ் மில்க்

நட்ஸ் மில்க் மிகவும் குறைந்த கலோரி தேர்ந்தெடுக்கும் நட்ஸ்களை பொறுத்து இரும்புச்சத்துக்கான சிறந்த ஆதாரமாக இருக்கும்.

இதில் வைட்டமின் ஈ, மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளது. மேலும் இதில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி சத்துக்களும் உள்ளது.

பாதம், வால்நட், முந்திரி போன்ற நட்ஸ்களுடன் பால் கலந்து தயார் செய்யலாம்.

இளநீர்

இளநீர் எலக்ட்ரோலைட்டுகள் நிறைந்திருக்கின்றன, இது உடலை எடையை கட்டுக்குள் வைத்திருக்க சிறந்தது.

மேலும் இதில் வைட்டமின் சி, மெக்னீசியம், மாங்கனீசு மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.

இந்த வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் சருமத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் கொலாஜன் உற்பத்தியை மேம்படுத்துகிறது.

Recommended For You

About the Author: webeditor