ADBயினால் இலங்கைக்கு 600 மில்லியன் டொலர்கள்

ஆசிய அபிவிருத்தி வங்கியினால்(ADB) இலங்கைக்கு 600 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி வழங்கப்படவுள்ளதாக அதன் சிரேஷ்ட அதிகாரியொருவரை மேற்கோள்காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி சேவை தெரிவித்துள்ளது.

குறித்த நிதியானது சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) இரண்டாவது கடன் தவணை கிடைக்கப்பெற்ற பின்னர், கட்டம் கட்டமாக வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

”சர்வதேச நாணய நிதிய கடன் வசதியின் இரண்டாவது தவணை கொடுப்பனவு கிடைக்கப்பெற்றதன் பின்னரே குறித்த நிதி வழங்கப்படும்” என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இரண்டாவது தவணை கொடுப்பனவை விடுவிப்பது தொடர்பில் தீர்மானிப்பதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழு எதிர்வரும் 12 ஆம் திகதி கூடவுள்ளது.

இது தொடர்பான நிபந்தனைகளைப் பூர்த்தி செய்வது தொடர்பிலான முன்னேற்றம் குறித்து IMF அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin