மார்பு பகுதியில் வலி வந்தால், அவருக்கு இதயம் தொடர்பான ஏதேனும் நோய் இருக்குமோ அல்லது அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்படுகின்றது.
மார்பு பகுதிகளுக்கு இடையிலான வலி: ஒருவருக்கு மார்பின் எந்தப் பகுதியில் வலி ஏற்பட்டாலும், அவருக்கு இதயம் தொடர்பான ஏதேனும் நோய் இருக்குமோ அல்லது அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்படுகின்றது.
ஆனால் மார்பின் மையத்தில் வலி என்பது இதய நோயின் அறிகுறி மட்டுமல்ல. மாறாக மற்ற நோய்களின் அறிகுறியாகவும் இது இருக்கலாம். ஆகையால், மார்பில் ஏற்படும் வலியை எப்போதும் அலட்சியம் செய்ய வேண்டாம்.
ஏனெனில் நெஞ்சின் நடுப்பகுதியில் வலி ஏற்பட்டால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். நெஞ்சின் நடுவில் வலி ஏற்படுவதற்கு என்ன காரணம் என்று இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
இவ்வாறான காரணங்களால் கூட மார்பின் நடுப்பகுதியில் வலி ஏற்படுகிறது:
இரைப்பை – உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய்: ஒரு நபர் மார்பின் நடுப்பகுதியில் வலியை உணர்ந்தால், அது, இரைப்பை – உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோயின் காரணமாகவும் இருக்கலாம். இந்த பிரச்சனை பெரும்பாலும் அதிக எடை கொண்டவர்களிடம் காணப்படுகிறது.
இந்த நிலையில் வயிற்றில் உற்பத்தியாகும் அமிலம் மீண்டும் உணவுக் குழாயில் வந்து சேரும். இதன் காரணமாக உங்கள் மார்பின் நடுப்பகுதியில் வலி ஏற்படுகிறது.
அமிலத்தன்மை : அசிடிட்டி காரணமாகவும் மார்பின் நடுப்பகுதியில் வலி ஏற்படலாம். ஏனெனில் உணவுக் குழாயில் அமிலம் வரும்போது நெஞ்சின் நடுவில் வலி ஏற்படும்.
இந்த வலி அடிவயிற்றின் மேல் பகுதியிலும் ஏற்படுகிறது. இதில் உங்களுக்கு மார்பின் நடுவில் கடுமையான வலி ஏற்படலாம். ஆகையால் வாயுப் பிரச்சனையை கண்டிப்பாக லேசாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
மார்பு எலும்பு முறிவு : ஸ்டெர்னம் மேல் உடலின் இயக்கத்திற்கு மிகவும் முக்கியமானது. ஸ்டெர்னமில் எலும்பு முறிவு ஏற்பட்டால், மார்பின் நடுவில் வலி உணரப்படுகிறது. இந்த காயம் விளையாடும் போது அல்லது உடல் செயல்பாடுகளின் போது ஏற்படலாம்.