தபால் நிலைய தலைவர்களை எச்சரிக்கும் ஜனாதிபதி!

தன்னுடன் விளையாட வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தபால் நிலைய தலைவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி என்ற ரீதியில் தாம் வழங்கிய அறிவுறுத்தல்களை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என நுவரெலியா விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடும் தொனியில் தெரிவித்துள்ளார்.

நுவரெலியா தபால் நிலைய கட்டிடத்தை சுற்றுலா ஹோட்டலாக நடத்துவதற்கு இதுவரை அனுமதி வழங்கப்படாதது தொடர்பில் வினவியபோதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ரணில் எச்சரிக்கை
சுற்றுலாத்துறைக்கு கட்டடத்தை வழங்குவதற்கு ஜனாதிபதி என்ற ரீதியில் வழங்கிய பணிப்புரைகளை நடைமுறைப்படுத்த தபால் மா அதிபர் இணங்காவிட்டால், மற்றுமொருவரை கண்டுபிடிக்க வேண்டியிருக்கும் என ஜனாதிபதி, தபால் மா அதிபருக்கு அறிவிக்குமாறும் தெரிவித்துள்ளார்.

இந்த உத்தரவை ஒரு வாரத்திற்குள் நடைமுறைப்படுத்துமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

கடந்த 4ஆம் திகதி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor