விண்வெளியில் 7 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு!

விண்வெளியில் 7 புதிய கிரகங்கள் கொண்ட அமைப்பை நாசா கண்டுபிடித்துள்ளது. கெப்ளர் தொலைநோக்கி மூலம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த புதிய அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

இந்த கிரகங்கள் சூரிய மண்டலத்தில் இருக்கும் கிரகங்களை விட அதிக வெப்பமானவை என்றும், இதற்கு கெப்ளர் 385 என பெயரிடப்பட்டுள்ளதாகவும் நாசா கூறியுள்ளது.

அதேவேளை புதியதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள 7 கிரகங்களும் பூமியை விட பெரியதாகவும், நெப்டியூனை விட சிறியதாகவும் பல்வேறு அம்சங்களைக் கொண்டிருப்பதாகவும் நாசா குறிப்பிட்டுள்ளது.

மேலும் இந்த அமைப்புக்கு நடுவே சூரியனைப் போன்ற நட்சத்திரம் இருப்பதாகத் தெரிவித்துள்ள நாசா விஞ்ஞானிகள், இது சூரியனைவிட 10 விழுக்காடு பெரிய அளவிலும், சூரியனை விட 5 விழுக்காடு அதிக வெப்பம் கொண்டதாக இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor