ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்திலுள்ள கண்டகபள்ளி ரயில் நிலையத்தில் அருகே 2 ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதி கோர விபத்து ஏற்பட்டது. இதில், ரயில்களின் பெட்டிகள் மற்றும் தண்டவாளங்கள் உருக்குலைந்தன
இந்த கோர ரயில் விபத்தில் 19 பேர் மரணமடைந்துள்ளார். பலர் படுகாயமடைந்துள்ளனர்.
சில மாதங்களுக்கு முன்பு, ஒடிசா மாநிலம் பாலசோர் ரயில் நிலையம் அருகே 3 ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதி கோர விபத்து ஏற்பட்டது. அதைப் போலவே, தற்போது ஆந்திரா மாநிலத்தில் 2 ரயில்கள் மோதிக் கொண்டுள்ளன. இரண்டு விபத்துகளிலும் சிக்னல் கோளாறு காரணமாக கூறப்படுகிறது.
இந்த ரயில் விபத்தில் சிக்கிக் கொண்டுள்ள தங்களின் உறவினர்களைப் பற்றி தெரிந்துகொள்ள இந்திய ரயில்வே அவசர உதவி எண்களை வெளியிட்டுள்ளது. BSNL 08912746330, 08912744619 Airtel – 8106053051, 8106053052 BSNL – 8500041670, 8500041671
கடந்த ஜூன் மாதம் நடந்த ஒடிசாவில் ரயில் விபத்தில் 288 பேர் உயிரிழந்தனர். 1,175 பேர் காயமடைந்தனர். இன்னும் உயிரிழந்த 28 பேரின் உறவினர்கள் கண்டறியப்படாமல் உள்ளனர். இந்த நிலையில், ஆந்திர மாநிலத்தில் நடந்த துயர விபத்து சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.