ஆஸ்திரேலிய அணி வெற்றி

உலகக்கோப்பை தொடரில் அடுத்தடுத்து 4 போட்டிகளில் வென்றது மகிழ்ச்சியளிப்பதாக ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பை தொடரில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நியூசிலாந்து – ஆஸ்திரேலியா இடையிலான ஆட்டம் ரசிகர்களுக்கு சிறந்த போட்டியாக அமைந்துள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 49.2 ஓவர்களில் 388 ரன்கள் சேர்த்து ஆல் அவுட்டாகியது. சிறப்பாக ஆடிட தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் 67 பந்துகளில் 109 ரன்கள் சேர்த்து அசத்தினார்.

இதன்பின் களமிறங்கிய நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 383 ரன்கள் சேர்த்தது தோல்வியடைந்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பதிவு செய்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலிய அணியின் அரையிறுதி வாய்ப்பும் பிரகாசமாகியுள்ளது.

அதேபோல் சிறப்பாக விளையாடி சதம் விளாசிய டிராவிஸ் ஹெட் ஆட்டநாயகன் விருதை வென்றார். அதேபோல் முதல் 2 போட்டிகளில் ஆஸ்திரேலியா தோல்வியடைந்த நிலையில், தற்போது 4 போட்டிகளில் அடுத்தடுத்து வெற்றிபெற்று கம்பேக் கொடுத்துள்ளது.

இதுகுறித்து ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் பேசுகையில், இந்த வெற்றி மகிழ்ச்சியளிக்கிறது. நியூசிலாந்து அணி மீண்டும் மீண்டும் எழுச்சி பெற்று வெற்றிக்காக போராடியதால், சிறந்த போட்டிகளில் ஒன்றாக அமைந்துள்ளது.

டிராவிஸ் ஹெட் கடந்த 5 வாரங்களாக ஓய்வில் இருக்கிறார். நேரடியாக இந்த போட்டியில் தான் களமிறங்குகிரார். தொடக்க வீரர்கள் இருவருமே சிறப்பாக விளையாடி அட்டாக்கை தொடங்கினார்கள்.

வார்னர் – டிராவிஸ் ஹெட் இருவரும் அட்டாக்கை முன் நின்று வழி நடத்தினார்கள். இந்த பிட்ச் சிறந்த ஒன்றாக உள்ளது. அதேபோல் எங்களின் ஃபீல்டிங் கொஞ்சம் சொதப்பாக இருந்தது.

அதனை சரியாக செய்திருந்தால், பெரிய மாற்றம் இருந்திருக்கும். அடுத்த போட்டிக்கு முன் 5 முதல் 6 நாட்கள் ஓய்வு கிடைத்துள்ளது. அதனால் இந்த வெற்றியை கொண்டாடுவோம். அதேபோல் எங்களின் இலக்கு குறித்தும் கவனத்தில் கொள்வோம் என்று கூறியுள்ளார்.

Recommended For You

About the Author: admin