” திருநீற்று நெறி ஓங்க அரசாட்சி செய்த நாயனார் ” குருபூசையும் சொற்பொழிவும்

சாவல்கட்டில் குருபூசையும், சொற்பொழிவும் நடைபெற்றது.

சைவ வாழ்வியலில் பெரிய புராணம் பெறும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் முகமகாச் சிவநெறிப் பிரகாசர் சமயஜோதி கதிகாமன் நிஜலிங்கம் அவர்களின் ஒழுங்கமைப்பில் வாராந்த பெரியபுராணச் சிறப்புச் சொற்பொழிவுத் தொடர் 29
( இடங்கழி நாயனார்) யாழ்ப்பாணம் சாவல்கட்டு ஆனைக்கோட்டை அந்திக்குழி அருள்மிகு ஸ்ரீ ஞான வைரவர் காளி அம்பாள் தேவஸ்தானப் பிரதான மண்டபத்தில் 29. 10.2023 வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணிக்கு நடைபெற்றது.

சேக்கிழார் பெருமானின் குருபூஜையை தொடர்ந்து சொற்பொழிவினை இளஞ்சைவப்புலவர் க. கயிலைவாசன் அவர்கள் ” திருநீற்று நெறி ஓங்க அரசாட்சி செய்த நாயனார் ” என்னும் விடயப்பொருளில் சொற்பொழிவு ஆற்றினார்.

 

சொற்பொழிவில் இருந்து மாணவர்களிடம் வினாக்கள் தொடுக்கப்பட்டுப் பாராட்டுப் பரிசில்கள் வழங்கப்பட்டன.

Recommended For You

About the Author: S.R.KARAN