இலங்கை அணிக்கு அபார வெற்றி.

இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான உலகக்கிண்ண தொடரின் இன்றைய போட்டியில் இலங்கை அணி 08 விக்கெட்களினால் அபார வெற்றி ஒன்றினை பெற்றுள்ளது.

பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியை 156 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க செய்து அந்த இலக்கை 25.4 ஓவர்களில் 02 விக்கெட்களை இழந்து 160 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.

ஆரம்ப விக்கெட்கள் இரன்டு அடுத்தடுத்து சிறிய இடைவெளிகளில் வீழ்த்தப்பட்ட போதும் பத்தும் நிஸ்ஸங்க நல்ல ஆரம்பத்தை வழங்கி இலங்கை அணியின் வெற்றியை இலகுபடுத்தினார். சதீர சமரவிக்ரம, நிஸ்ஸங்க ஆகியோர் சத இணைப்பாட்டத்தை பகிர்ந்தனர். அத்தோடு அரைச்சதங்களை பூர்த்தி செய்தனர்.

நாணய சுழற்ச்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

இலங்கை அணியின் அபார பந்துவீச்சில் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர்கள் தடுமாறிப்போனார்கள். ஆரம்ப இணைப்பாட்டம் 45 ஓட்டங்களை வழங்கிய போதும் பின்னர் விக்கெட்கள் அடுத்தடுத்து வீழ்த்தப்பட்டன. இந்தப் போட்டிக்காக அழைக்கப்பட்ட லஹிரு குமார, அஞ்சலோ மத்தியூஸ் ஆகியோர் சிறப்பாக பந்துவீசி விக்கெட்களை தகர்த்தனர்.

ஆறாவது விக்கெட் இணைப்பாட்டமாக பென் ஸ்டோக்ஸ் மற்றும் மெயின் அலி இணைந்து தடுமாறிய அணியை மீண்டும் கட்டி எழுப்பினார்கள். இருப்பினும் மத்தியூஸ் அதனை முறியடித்தார். அதன் பின்னர் அடுத்தடுத்து விக்கெட்கள் வீழ்ந்தன.

பென் ஸ்டோக்ஸ் கூடுதலான ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் லஹிரு குமார கூடிய விக்கெட்களை கைப்பற்றினார். அஞ்சலலோ மத்தியூஸ் மிக சிறப்பாக பந்துவீசி தனது மீள் வருகையை காண்பித்துள்ளார். இவ்வாறு தொடர்ந்து செயற்பட்டால் நல்லதே.

இரு அணிகளும் 5 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் இலங்கை அணி இரண்டாவது வெற்றியை பெற்றுள்ளது. உலகக்கிண்ண தொடரின் இறுதி வரை செல்லுமென எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து அணி தோல்வியடைந்ததன் மூலம் அரை இறுதி வாய்ப்பை பெறுவதே சந்தேகம் என்ற நிலை உருவாகியுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி ஐந்தாமிடத்துக்கு முன்னேறியுள்ளது. இங்கிலாந்து அணி ஒன்பதாம் இடத்துக்கு பின் தள்ளப்பட்டுள்ளது.

அணி விபரம்

இங்கிலாந்து அணி : ஜொனி பாஸ்டோ, டாவிட் மலான், ஜோ ரூட், பென்ஸ் ஸ்ட்ரோக்ஸ், ஜோஸ் பட்லர், லியாம் லிவிங்க்டன், மொயீன் அலி , டேவிட் வில்லி, ஆதில் ரஷீட், மார்க் வூட், க்றிஸ் வோக்ஸ்

இலங்கை அணி: குஷல் மென்டிஸ்(தலைவர்), குசல் பெரேரா, பத்தும் நிஸ்ஸங்க, சதீர சமரவிக்ரம, சரித் அசலங்க, அஞ்சலோ மத்தியூஸ், தனஞ்சய டி சில்வா, மஹீஸ் தீக்ஷண, டில்ஷான் மதுஷங்க, லஹிரு குமார, கஸூன் ரஜித

 

வீரர் ஆட்டமிழப்பு பந்துவீச்சாளர் 4 6
பத்தும் நிஸ்ஸங்க 77 83 7 1
குசல் பெரேரா பிடி- பென்ஸ் ஸ்ட்ரோக்ஸ், டேவிட் வில்லி 05 08 1 0
குஷல் மென்டிஸ் பிடி- ஜோஸ் பட்லர், டேவிட் வில்லி 11 17 2 0
சதீர சமரவிக்ரம 65 54 7 1
உதிரிகள் 03
ஓவர்  25.4 விக்கெட்  10 மொத்தம் 160
பந்துவீச்சாளர் ஓ. ஓட்ட விக்
க்றிஸ் வோக்ஸ் 06 00 30 00
டேவிட் வில்லி 05 00 30 02
ஆதில் ரஷீட் 4.4 00 39 00
மார்க் வூட் 04 00 23 00
லியாம் லிவிங்க்டன் 03 00 17 00
மொயீன் அலி 03 00 21 00
வீரர் ஆட்டமிழப்பு பந்துவீச்சாளர் 4 6
ஜொனி பார்ஸ்டோவ் பிடி- தனஞ்சய டி சில்வா கஸூன் ரஜித 30 31 3 0
டாவிட் மலான் பிடி- குஷல் மென்டிஸ் அஞ்சலோ மத்தியூஸ் 28 25 6 0
ஜோ ரூட் Run Out 03 10 0 0
பென்ஸ் ஸ்ட்ரோக்ஸ் பிடி- டுஷான் ஹேமந்த லஹிரு குமார 43 73 6 0
ஜோஸ் பட்லர் பிடி- குஷல் மென்டிஸ் லஹிரு குமார 08 06 1 0
லியாம் லிவிங்ஸ்டன் L.B.W லஹிரு குமார 01 06 0 0
மொயீன் அலி பிடி- குசல் பெரேரா அஞ்சலோ மத்தியூஸ் 15 15 1 0
கிறிஸ் வோக்ஸ் பிடி- சதீர சமரவிக்ரம கஸூன் ரஜித 00 04 0 0
டேவிட் வில்லி 20 12 2 0
ஆடில் ரஷிட் Run Out 02 07 0 0
மார்க் வூட் பிடி- குஷல் மென்டிஸ் மஹீஸ் தீக்ஷண 05 06 1 0
உதிரிகள் 13
ஓவர்  33.2 விக்கெட்  10 மொத்தம் 156
பந்துவீச்சாளர் ஓ. ஓட்ட விக்
டில்ஷான் மதுஷங்க 05 00 37 00
கஸூன் ரஜித 07 36 02 01
மஹீஸ் தீக்ஷண 8.2 01 21 00
அஞ்சலோ மத்தியூஸ் 05 01 14 02
லஹிரு குமார 07 00 35 03
தனஞ்சய டி சில்வா 01 00 10 00
அணி போ வெ தோ ச/ கை பு ஓட்ட சராசரி வேகம்
இந்தியா 05 05 00 00 10 1.353
தென்னாபிரிக்கா 05 04 01 00 08 2.370
நியூசிலாந்து 05 04 01 00 08 1.481
அவுஸ்திரேலியா 05 03 02 00 06 1.142
இலங்கை 05 02 03 00 04 -0.205
பாகிஸ்தான் 05 02 03 00 04 -0.456
ஆப்கானிஸ்தான் 05 02 03 00 04 -1.250
பங்களாதேஷ் 05 01 04 00 02 -1.253
இங்கிலாந்து 05 01 04 00 02 -1.634
நெதர்லாந்து 05 01 04 00 02 -1.902

 

 

 

Recommended For You

About the Author: admin