மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார் இன்று காலமானார். அவருக்கு வயது 82.
மேல் மருத்துவத்தூரில் இவர் தொடங்கிய அறக்கட்டளை பல கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறது. ஆதிபராசக்தி கோயிலில் அனைத்து நாட்களிலும் பெண்கள் வழிபடலாம் என்று கடவுள் வழிபாட்டில் புரட்சி செய்தவர் பங்காரு அடிகளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக அவர் உயிரிழந்துள்ளாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அவரது பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பங்காரு அடிகளாரின் ஆன்மீகச் சேவையைப் பாராட்டி கடந்த 2019ஆம் ஆண்டு இந்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது அளித்து கௌரவித்தது குறிப்பிடத்தக்கது. பங்காரு அடிகளாருக்கு பல்வேறு நாடுகளிலும் பக்தர்கள் உள்ளனர். அவர்களால், அம்மா என்று அழைக்கப்பட்டு வந்தார் பங்காரு அடிகளார்.

இவரது மறைவை தொடர்ந்து ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன், டிடிவி தினகரன், எச்.ராஜா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.