மணிப்பூரில் மெய்தி மற்றும் குகி இரு இன மக்களுக்கிடையில் 4 மாதங்களுக்கு மேலாக கலவரம் இடம் பெற்று வருகின்றது.
இக் கலவரத்தில் 170 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
கலவரத்தகை் கட்டுப்படுத்துவதற்காக மாநில காவல்துறையினருடன் மத்திய பாதுகாப்பு படையினரும் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அண்மையில் இரண்டு மாணவர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து மணிப்பூரில் பல்வேறு போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இதனால் மணிப்பூர் முழுவதும் 5 நாட்களுக்கு இணையத்தள சேவையை அரசாங்கம் நிறுத்தி வைத்திருந்தது.
இதன்படி இன்றுடன் நிறைவடையவிருந்த இணையத்தள சேவைக்கான தடையை மேலும் 5 நாட்களுக்கு நீடிப்பதற்கு மணிப்பூர் மாநில அரசு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.