யாழ் விடுதியில் நஞ்சூட்டி கொல்லப்பட்ட சிறுமி

யாழ், திருநெல்வேலியில் தனியார் விடுதியொன்றில் தனது பாட்டியுடன் தங்கியிருந்த 12 வயதான சிறுமியொருவர் நேற்று முன்தினம் (12) சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

அறையில் சிறுமியின் பாட்டியும் உணர்வற்ற நிலையில் பொலிஸாரினால் மீட்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில்,

கவனித்துக்கொள்ள யாரும் இல்லை
பாட்டியும், பேத்தியும் திருகோணமலையைச் சேர்ந்தவர்கள் என்பதும், அவர்கள் கடந்த சில நாட்களாகக் குறித்த விடுதியில் தங்கியிருந்துள்ளமையும் தெரியவந்தது.

அத்துடன் என்பதும், சிறுமி உயிரிழந்து 03 நாட்களுக்கு மேல் இருக்கலாம் என்பதும் தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பாட்டியிடம் மேற்கொண்ட விசாரணையின் போது,

சிறுமி மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் அவரைக் கவனித்துக்கொள்ள யாரும் இல்லை என்ற காரணத்தினால், அவருக்கு நஞ்சூட்டிவிட்டு தானும் மரணிக்க முயன்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பாட்டியைக் கைது செய்த பொலிஸார் அவரை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor