வவுனியாவில் பழுதடைந்த கேக்கினை விற்பனை செய்த உணவகம்

வவுனியாவில் பழுதடைந்த கேக்கினை விற்பனை செய்ததாக வெதுப்பகம் ஒன்றிற்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா பொது சுகாதார பரிசோதகர்களிடம் நேற்று இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ் வெதுப்பகத்தில் விற்பனை செய்யப்பட்ட அடைக்கேக் ஒன்றினை கொள்வனவு செய்தவர் கேக் பழுதடைந்த நிலையில் காணப்படுவதாக வவுனியா பொது பரிசோதகரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

மேலும் முறைப்பாட்டையடுத்து சுகாதார பரிசோதகர்கள் முறைப்பாடு தொடர்பில் பரிசோதனைகளையும் விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor