உயிரிழந்த அக்கா
தெலங்கானா மாநிலம், ஜகிர்த்தியாலாவை சேர்ந்தவர் தீப்தி, 22 வயதான இவர் கணினி பொறியாளராக பணியாற்றி வந்தார். இவரது பெற்றோர் வெளியூர் சென்றிருந்த நேரத்தில் திடீரென இவர் வீட்டில் இறந்து கிடந்தார். இவரது தங்கையும் வீட்டில் காணவில்லை, அத்துடன் வீட்டில் இருந்த 70 சவரன் நகைகளும், ரூ.2 லட்சம் ரொக்கமும் மாயமானது.
தகவல் அறிந்த போலீசார் இவரை பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர், அதில் இவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார், இவரது தங்கை சந்தனாவை தேடி வந்தனர்.
கொன்ற தங்கை
இந்நிலையில், சந்தனா பெருந்து நிலையத்தில் ஒரு ஆணுடன் பஸ்சில் ஏறுவது சிசிடிவியில் தெரியவந்தது. பின்னர் அவர் இருக்கும் இடத்தை கண்டறிந்தனர், தொடர்ந்து, போலீசார் விசாரணை நடத்தியதில், அந்த பையன் ஐதராபாத்தை சேர்ந்த உமர்ஷேக்கும் (21) கல்லூரிக் காலத்தில் இருந்தே இருவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் வேறு சமூகம் என்பதால் வீட்டில் ஒப்புக்கொள்ளமாட்டார்கள் என்று இருவரு தப்பியோட நினைத்தனர்.
அப்பொழுது சந்தனா வீட்டில் பெற்றோர் இல்லாத சமயத்தில் வீட்டில் இருந்த நகை பணத்தை எடுத்துள்ளார். அப்பொழுதுக்கு சத்தம் கேட்டு வந்த இவரது அக்கா தடுக்க முயற்ச்சித்துளார். அந்த சமயத்தில் தங்கை இவரது காதலனுடன் சேர்ந்து அவரை தாக்கியுள்ளனர், பின்னர் அவரது துப்பட்டாவால் அவரது கழுத்தை நெரித்து படுக்கையறையில் தள்ளியுள்ளனர்.
இதனால் மூச்சுத்திணறி அக்கா இறந்துள்ளார், பின்னர், அவர் இயல்பாக இறந்தது போல் காண்பிக்க அக்காவின் சடலத்தை சோபாவில் சாய்த்துவிட்டு இருவரும் தப்பி சென்றது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, போலீசார் இவர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர், மேலும் இவர்களுக்கு துணையாக இருந்த உமர்ஷேக்கின் தாய் சையத்அலியா, உறவினர் ஷேக்அசியாபாத்திமா, அபீஸ் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்.