வாட்ஸ் அப் கொண்டு வரப்போகும் பல மாற்றங்கள்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?

உலகளவில் அதிகளவு யூஸர்களை கொண்ட வாட்ஸ்அப் புதிய அப்டேட்டுகளை அவ்வப்போது வழங்கி அதன் பயன்பாட்டை எளிதாக்கி வருகிறது. இந்த நிலையில், ஒரு பெரிய அப்டேட்டை மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப் தளத்திற்கு வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வாட்ஸ்அப் பீட்டா இன்ஃபோ வெளியிட்டுள்ள தகவல்களின்படி, வாட்ஸ்அப் தளம் புதிய UI டிசைனை பெறும் என்று தெரியவந்துள்ளது. சில பீட்டா பயனர்களுக்கு மட்டுமே இந்த புதிய அப்டேட் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. பழைய வாட்ஸ்அப் முழுவதிலும் பச்சை நிறத் தோற்றம் பெரிதாகத் தெரியும்.

ஆனால் புதிய யூசர் இண்டர்ஃபேசில் இது குறைக்கப்பட்டுள்ளது. முக்கியமாக உரையாடல்கள் பகுதி கீழே கொண்டு செல்லப்பட்டுள்ளது. மேலும் கம்யூனிட்டி பகுதிக்கென தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இன்னும் பல புதிய அம்சங்களை பீட்டா வெர்ஷன் வெளிகாட்டி உள்ளது. அந்த வகையில் புதிய வாட்ஸ்அப் வடிவமைப்பில் என்னென்ன புதுமைகளை எதிர்பார்க்கலாம், எவை எல்லாம் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என்பதை விரிவாகக் காணலாம்.

அதற்கு முன்னதாக இந்த தளம் சமீபத்தில் பல புதுமையான அம்சங்களை பயனர் வசதிக்காக அறிமுகம் செய்தது. அதில் எச்டி தரத்திலான புகைப்படங்களைப் பகிர்வது, எச்டி தரத்தில் காணொளிகளைப் பகிர்வது, வீடியோ மெசேஜ் அனுப்புவது பல முக்கிய அம்சங்கள் அடங்கும். மேலும் வீடியோ அழைப்புகளின் போது திரையை பகிரும் சூப்பர் அம்சத்தினையும் மெட்டா செயல்பாட்டுக்குக் கொண்டு வந்தது.

சில பீட்டா யூஸர்களுக்கு மட்டுமே இந்த சேவைகள் தற்போது சோதனை முறையில் கிடைக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய பீட்டா வெர்ஷன் வித்தியாசமாக இருப்பதாக யூஸர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதாவது முற்றிலுமாக வாட்ஸ்அப் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இனி சாட்ஸ், ஸ்டோரீஸ், கம்யூனிட்டீஸ், அழைப்புகள் ஆகியன கீழே பட்டியலிடப்பட்டிருக்கும். இது பயனர்களுக்கு ஒரு எளிமையான UI ஆக இருக்கும் என மெட்டா நம்பிக்கை தெரிவித்துள்ளது. மேலும், யூஸர் அக்கவுண்ட் தொடர்பான புகைப்படம் முகப்பு பகுதியில் தோன்றும். அதனுடன் பச்சை நிறம் கொஞ்சம் குறைப்பட்டுள்ளதை நம்மால் காண முடிகிறது.

Chat List-ற்கு இடையில் இருக்கும் கோடுகள் நீக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பீட்டா வெர்ஷன் 2.23.13.16 அப்டேட் வாயிலாக பயனர்களுக்கு கிடைக்கும். இது சோதனை முயற்சியில் இருப்பதால், விரைவில் யூஸர்களுக்கு படிப்படியாக அப்டேட்டுகள் வாயிலாக கிடைக்கும் என்று மெட்டா வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாட்ஸ்அப் அப்டேட் செய்வது எப்படி?

உங்கள் மொபைலில் App Store (iPhone) அல்லது Google Play Store (Android) செயலியைத் திறக்கவும்

திரையின் மேற்புறத்தில் உள்ள தேடுபொறியில் “WhatsApp” என்று தேடவும்.

புதுப்பிப்பு உள்ளது என்றால், “அப்டேட்” பட்டனுடன் பட்டியலிடப்பட்டுள்ள வாட்ஸ்அப் செயலியைக் காண்பீர்கள்.

“அப்டேட்” பட்டனை கிளிக் செய்யவும்.

Recommended For You

About the Author: admin