நாம் தவிர்த்து கொள்ள வேண்டிய காய்கறிகள்

காய்கறிகள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும், அவற்றால் ஏற்படும் நன்மைகள், தீமைகள் பக்கவிளைவுகள் என அனைத்தையும் அறிந்துக் கொண்டால் பயன்படுத்துவது சுலபமாக இருக்கும்:

தற்போது உடல் பருமன், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், இதய நோய் போன்ற பல நோய்களுக்கு மக்கள் பலியாகி வருவதால், ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

காய்கறிகளை உட்கொள்வது நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்று பொதுவாக நம்பப்படுகிறது. இது பெரும்பாலும் உண்மை என்றாலும், சில காய்கறிகளை கொஞ்சம் கவனமாக சாப்பிட வேண்டும், இல்லையெனில் அவை எதிர்மறையான விளைவுகளை தந்துவிடும்.

காலிஃபிளவர் மற்றும் முட்டை கோஸ்

காலிஃபிளவர் என்பது ஆரோக்கியமான மற்றும் துரித உணவுகளில் பயன்படுத்தப்படும் ஒரு காய்கறி ஆகும். சிலருக்கு காலிஃபிளவர் ஒவ்வாமையை ஏற்படுத்தும். அதனால், அமிலத்தன்மை மற்றும் வீக்கம் ஏற்படலாம்.

முட்டைக்கோஸில் பல வகையான ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன, ஆனால் இது செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. காலிஃபிளவரைப் பச்சையாகச் சாப்பிடக்கூடாது, ஏனெனில் அது வயிற்று வலி ஏற்படுத்தலாம்.

காளான்கள் : காளான் ஒரு விலையுயர்ந்த உணவு, ஆனால் அதன் நன்மைகள் ஏராளம், வைட்டமின் டி நிறைந்த ஆதாரமாக கருதப்படும் காளான், சிலருக்கு ஒவ்வாமை பிரச்சனை ஏற்படுத்தலாம்.

பொதுவாக அலர்ஜியால் அவதிப்படுபவர்கள், களான் உட்கொள்ளும்போது கவனமாக இருக்க வேண்டும். களானால் சரும பிரச்சனைகளை ஏற்படலாம் என்பதால் காளான் வாங்கும்போதும் கவனமாக இருக்க வேண்டும்.

கேரட் : கேரட் மிகவும் ஆரோக்கியமான காய்கறிகளில் ஒன்று. கேரட்டின் சத்துக்களை முழுமையாகப் பெற விரும்பினால், பச்சையாக சாப்பிடுவது நல்லது,

ஆனால் பல சுகாதார நிபுணர்கள் கேரட்டில் கரோட்டின் அதிகமாக இருப்பதால் குறைந்த அளவிலேயே உட்கொள்ள வேண்டும் என்று கூறுகின்றனர். அதிகமாக கேரட் சாப்பிட்டால் தோலின் நிறம் வெளுத்துப் போகலாம்.

பீட்ரூட் : பீட்ரூட் சாலட் மற்றும் சாறு வடிவில் உட்கொள்ளப்படுகிறது, பீட்ரூட் பல நன்மைகளை கொண்டிருந்தாலும், அதிகமாக சாப்பிட்டால், சிறுநீரின் நிறம் இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிறமாக மாறத் தொடங்கும், அது மிகவும் ஆபத்தானது அல்ல, ஆனால் நீங்கள் அதை குறைந்த அளவில் உட்கொண்டால் நல்லது.

Recommended For You

About the Author: webeditor