அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விற்ப்பனையில் வீழ்ச்சி!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறிப்பிடத்தக்க அளவு வீழ்ச்சியடைந்துள்ளது.

இருப்பினும், இதுவரையில் குறித்த நிவாரணத்தை நுகர்வோருக்கு வழங்குவதற்கு சில்லறை வர்த்தக நிலைய உரிமையாளர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, 600 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் பருப்பின் மொத்த விலை தற்போது 420 ரூபா வரையில் வீழ்ச்சியடைந்துள்ளது.

மேலும், 330 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் சீனியின் மொத்த விலை 270 ரூபாவாக குறைவடைந்துள்ளது.

ஆயிரத்து 900 ரூபாவுக்கு விற்பனையான ஒரு கிலோகிராம் செத்தலின் விலை ஆயிரத்து 200 ரூபாவாக குறைவடைந்துள்ளதாக புறக்கோட்டை மொத்த விற்பனையாளர்கள் சங்கத்தின் நிறைவேற்று குழு உறுப்பினர் ஜே.தேவபிரான் தெரிவித்தார்.

ஒரு கிலோகிராம் வெள்ளைப் பூண்டின் விலை 400 ரூபா வரையிலும், உருளைக்கிழங்கு ஒரு கிலோகிராம் 150 ரூபா வரையிலும் பெரிய வெங்காயம் 135 ரூபா வரையிலும் வீழ்ச்சியடைந்துள்ளன.

நாணய கடிதங்களை விடுவிக்காமல் இறக்குமதியாளர்கள் அத்தியாவசிய உணவு பொருட்களை நேரடியாக இறக்குமதி செய்வதற்கு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளமையே விலை குறைப்புக்கு காரணமாகும் என்று புறக்கோட்டை மொத்த விற்பனையாளர்கள் சங்கத்தின் நிறைவேற்று குழு உறுப்பினர் ஜே.தேவபிரான் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: webeditor