யாழ் மாவட்டத்தில் வறட்சி ஏற்ப்படும் அபாயம்!

யாழ்ப்பாண மாவட்டத்தின் வறட்சி நிலவரம் தொடர்பில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடல் கடந்த 25ஆம் திகதி (25.08.2023) மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரன் தலைமையில் நடைபெற்றுள்ளது.

இதன்போது மாவட்டத்தின் வறட்சி நிலைமை தொடர்பாக ஆராயப்பட்டதுடன், வறட்சியில் இருந்து பாதுகாத்து கொள்வதற்காக நீர் நிலைகளை தூர்வாருதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

கலந்துரையாடலில் கலந்து பங்கேற்றவர்கள்
குறித்த கூட்டத்தில் பிரதேச செயலாளர்கள், மாகாண விவசாயப் பணிப்பாளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலக வைத்திய அதிகாரி, நீர்ப்பாசன பொறியியலாளர், உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலக பிரதிநிதி, நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை பொறியியலாளர், கமநல அபிவிருத்தி திணைக்கள அலுவலர் மற்றும் இலங்கை இராணுவத்தின் பிரதிநிதி, கடற்படைப் பிரதிநிதி ஆகியோரும் உலக உணவுத்திட்ட அலுவலர் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

Recommended For You

About the Author: webeditor