இலங்கையில் டெங்கு நோயால் 32 பேர் மரணம்

நாடாளவிய ரீதியில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை நாளை முதல் மூன்று நாட்களுக்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

வீடுகள், பாடசாலைகள், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை பரிசோதிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன்போது இராணுவம், பொலிஸ் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். கடந்த ஆறு மாதங்களில் நாளாந்தம் 400க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இந்த நிலையில் தற்போது நாளாந்தம் 200 டெங்கு நோயாளர்கள் மட்டுமே பதிவாகி வருவதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் நளின் ஆரியரத்ன தெரிவித்தார்.

டெங்கு நோயாளர்கள் அடையாளம்

கடந்த ஆறு மாதங்களில் 51,768 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 32 மரணங்கள் பதிவாகி உள்ளன.

இந்நிலையில், டெங்கு நோயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுகாதார வைத்திய அதிகாரியின் 48 பிரிவுகள் அதிக ஆபத்துள்ள பிரிவுகளாகவும், அதிகூடிய டெங்கு நோயாளர்கள் 25,835 பேர் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதாக நளின் ஆரியரத்ன மேலும் தெரிவித்தார்.

அதற்கு மேலதிகமாக மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் டெங்கு நோயாளர்கள் அதிகம் காணப்படுகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor