தங்க நகைகளை அடகு வைப்போருக்கான செய்தி!

வங்கி மற்றும் அடகு வைக்கும் நிலையங்களில் தங்க நகைகளை அடகு வைக்கும் போது அதற்காக பயன்படுத்தும் அளவை இயந்திரங்களில் உள்ள குறைப்பாடுகள் தொடர்பாக முறைப்பாடுகள் பல கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க நகைககள் அதிகாரசபையின் பணிப்பாளர் ஏ.ஐ.எஸ். பண்டார தெரிவித்துள்ளார்.

தற்போது பாவனையில் உள்ள இயந்திரங்களின் ஊடாக போலி தங்கங்களை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் அளவை திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலைமையை தவிர்ப்பதற்கு பயிற்சிபெற்ற அதிகாரிகளை நிதி மற்றும் வங்கி நிறுவனங்களில் இணைத்துக் கொள்ள வேண்டும்.

தங்க நகைகளை அடகு வைப்பதற்கு முன்னர் மாணிக்கக்கல் ஆபரண அதிகாரசபையின் ஊடாக பரிசோதனை அறிக்கையை பெற்றுக் கொள்ள முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: webeditor