மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் கொக்குவில் படுகொலை நினைவுத் தூபியில் முள்ளிவாய்க்கால் கஞ்சிவாரத்தின் நான்காம் நாள் அனுஷ்டிப்பு!

முள்ளிவாய்க்கால் அனுஸ்டிப்பு கஞ்சி வாரத்தின் நான்காவது நாளான இன்று தமிழர் தாயக மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் கொக்குவில் படுகொலை நினைவுத் தூபியில் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது.

முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரம் வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் சிவில் அமைப்புகளின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் இன்றைய மேற்படி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வி.லவக்குமார் தலைமையில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இறுதி யுத்தத்தில் உயிர்நீத்த மக்களின் அவலத்தினை வெளிப்படுத்தும் முகமாக மேற்கொள்ளப்படுகின்ற இச்செயற்திட்டமான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட நினைவுத் தூபிகள் அமைந்துள்ள இடங்களை மையப்படுத்தி முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor