கிளிநொச்சி மாவட்டத்தின் டெங்கு பரவல் தொடர்பான கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை கேட்போர் கூடத்தில் இன்று (08-05-2023) இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலில் கிராம மட்ட குழுக்களை நியமித்து அவற்றின் மூலம் டெங்கு விழிப்புணர்வு செயற்பாடுகளை முன்னெடுக்கவும் அதே நேரம் டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கான சகல நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், மாவட்ட பொது வைத்தியசாலை பொறுப்பு வைத்தியர், கரைச்சி – கண்டாவளை பச்சிலைப் பள்ளி பூனகரி ஆகியவற்றின் பிரதேச செயலாளர்கள், மாவட்ட தொற்றுநோயியல் பிரிவு வைத்திய பொலிஸார் இராணுவத்தினர் கரைச்சி பூநகரி பச்சிலைப்பள்ளி ஆகிய பிரதேச சபைகளின் செயலாளர் பொதுச் சுகாதார பரிசோதரர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.