யாழ்ப்பாணம் தையிட்டியில் காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள் ஆரம்பித்த போராட்டத்தைக் குழப்ப வேண்டுமென்பதற்காகச் சிலர் போலியான கடிதங்களை அவசர அவசரமாக எழுதி வெளியிட்டிருக்கின்றார்கள் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரட்ணம் சுகாஷ் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதை எழுதியவர்கள் வருங்காலங்களில் இவ்வாறான கடிதங்களை எழுதும்போது,
01. திகதிகளைக் கவனிக்க வேண்டும். 2019 இல் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கவில்லை.
02. 2019 இல் வழங்கப்பட்ட கடிதத்தில் 05 ஆவது நபராக உள்ள சிவகுமார் என்பவரின் தொலைபேசி இலக்கம் 11 இலக்கங்களைக் கொண்டிருக்கின்றது.
அதை அப்பிடியே பார்த்து எழுதும்போது ஈயடிச்சான் கொப்பி போல 2021 ஆம் ஆண்டு திகதியிட்ட கடிதத்திற்கும் 11 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கின்றன.
03. காணி உரிமையாளர்களின் கையொப்பங்கள் இரு கடிதங்களிலும் வித்தியாசமாக இருக்கின்றன.
04. 2021 ஆம் ஆண்டு திகதியிடப்பட்ட கடிதத்தில் 04 ஆவது, 05 ஆவது நபர்களின் கையெழுத்துக்களில் Initial இல் வித்தியாசம் வேண்டும்.
“A” ஐ பார்க்க ஒருவரே கையெழுத்து வைத்திருப்பது தெரிகிறது. ஆனால், 2019 இல் கையெழுத்து வித்தியாசமாக இருக்கின்றது.
இவற்றைத் திருத்திவிட்டுக் கடிதத்தை வெளியிடவும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரட்ணம் சுகாஷ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.