வட மாகாண மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ள ஆளுநர்

வட மாகாணத்தில் காணி அற்ற, வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட சுமார் ஒரு இலட்சத்து 18 ஆயிரம் குடும்பங்களுக்கு அரச காணிகளைப் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடமாகாணத்தில் காணி அற்ற வறுமை நிலையில் வாழும் குடும்பங்களுக்கான நன்கொடைக் காணிகள் வழங்கும் செயற்பாடுகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

அதே போன்று காணி அற்ற அரச உத்தியோகத்தர்களுக்கும் குத்தகைக்கு மற்றும் வீடுகளை கட்டுவதற்கு காணிகள் வழங்கும் செயற் திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

வட மாகாணத்தில் சுமார் 4 இலட்சம் மரங்கள் ஒவ்வொன்றிற்கும் 1:5 என்ற விகிதத்தில் மரங்களை நாட்டுவதற்கு புதிய நீர்த்தேக்கங்களை உருவாக்குவதற் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாது வழங்கப்படும் காணி துண்டுகளில் ஏற்கனவே உள்ள பயன் தரும் மரங்கள் அல்லது காணி துண்டுகளில் நடுகை செய்யும் பயன்தரும் மரங்களுக்கான இலவச ஆலோசனைகளும் பெற்றுக் கொடுக்கப்படும்.

அதன்படி குறித்த திட்டத்தினை செயல்படுத்துவதற்காக மாகாண அமைச்சுக்களின் அதிகாரிகள் உள்ளூர் ஆட்சி மன்றங்களின் உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச குழுக்கள் இணைந்து பணியாற்றுவதற்கான செயற்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் மாகாணத்தில் உள்ள ஒவ்வொரு ஏழைக் குடும்பமும் 10 பேர்ச் அரச காணிக்கு உரிமையாளராக மாறுகின்ற நிலையில் அவர்களுக்கான பயன் தரும் மரங்களை அவர்களே அறுவடை செய்யும் உரிமம் வழங்கப்படும் என ஆளுநர் மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: webeditor