மஹிந்தவை பிரதமராக்குவதில் ஆர்வம் காட்டும் சீனா!

மகிந்தவை மீண்டும் பிரதமராக்குவதில் சீனா மும்முரமாகச் செயற்பட்டு வருகின்றது என அண்மையில் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தீவிர அரசியல் செயற்பாட்டைத் தொடங்கியது தான் தாமதம், அவரது வீட்டுக்கு அடிக்கடி பல முக்கிய பிரமுகர்கள் வந்து போகின்றார்கள்.

அவர்களுள் முக்கியமான வெளிநாட்டுத் தூதுவர் ஒருவரும் அடங்குகின்றார். அவர்தான் இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென் ஹொங்.

சீனத் தூதுவர்

அவர் இப்போதெல்லாம் அடிக்கடி மகிந்தவின் விஜேராம வீட்டுக்குச் சென்று மகிந்தவுடன் நீண்ட நேரம் பேசிவிட்டுப் போகின்றார்.

சீனா என்றாலே ஊடகங்கள் விழிப்படைவது வழமைதானே.

அப்படித்தான் இந்த விடயத்திலும் ஊடகங்கள் விழிப்படைந்துள்ளன என தெரிவிக்கப்படுகின்றது.

Recommended For You

About the Author: webeditor